Saturday 3 August 2013

தமிழகத்தில் திகம்பர சமண முனிவரின் மழைகால தங்குதல்(சாதுர்ய மாத )புண்ணிய நிகழ்ச்சி:


21.7.2013 திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரியகொழப்பலூர்
கிராமத்தில் உள்ள திகம்பர சமண(ஜைன)ஆலயத்தில்,
திருக்குறள் தவமணி குருவரர்
ஸ்ரீ  108 விஷ்வேஷ் சாகர் முனிமகராஜ் அவர்கள் சாதுர்மாத தங்குதல்
விழா சிறப்பாக நடைப்பெற்றது.அச்சமயம் முனிமகராஜ் அவர்கள் தன்னுடைய குரு ஸ்ரீ 108 விராக்சாகர் மகராஜ் பெயரில் நடத்தும் ஸ்ரீ விராக் அறக்கட்டளை சார்பிலும்,தமிழக ஜைன மாணவ/மாணவியர்களின் கல்வி என்னும் கடலில் கரைசேர கலங்கரை விளக்கமாக திகழும் M.K.JAIN அவர்களின் சரிதா பவுண்டேஷன் சார்பிலும் ஏராளமான தமிழக ஜைன மாணவ/மாணவியர்களுக்கு
(+12,B.E,ARTS&SCIENCE,POLYTECHNIC) கல்வி உதவி தொகை வழங்கி சிறப்பு செய்தனர்.
தமிழக திகம்பர ஜைன மாணவ மாணவியர்களுக்கு வருடம் தோறும் இதுபோன்று உதவி தொகை வழங்கி அவர்களின் வாழ்கையில் ஒளியேற்றும்
நடமாடும் திகம்பர தெய்வமாக திகழும் ஸ்ரீ 108 விஷ்வேஷ் சாகர்ஜி முனிமகராஜ்
அவர்களுக்கும்,கல்வித்தந்தை திரு.M.K.Jain அவர்களுக்கும் எங்களின் சார்பாகவும்,தமிழக சமணர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை
அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.


மேலும்,முனிமகாராஜுடன் இணைந்து தகுதியான திகம்பர ஜைன மாணவ\மாணவியர்களை தேர்வு செய்து ,தங்களுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி
ஜைன அறம் காக்க தன்னலம் இல்லா தொண்டாற்றி செயல்படும்
திண்டிவனம் திரு சின்னப்பா ஜைன்(RETD HEAD MASTER) அவர்களுக்கும்,
திண்டிவனம் சீத்தல் ஜீவல்லரி உரிமையாளர் சமணத்தென்றல் திரு.ஸ்ரேணிக்ராஜ் மற்றும் இவர்களுடன் இணைந்து செயல்படும் சமண சான்றோர்கள் அனைவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த புனித அறப்பணிகளை செய்து திகம்பர ஜைன மத மாணிக்கங்களாக திகழும் இவர்களது அறப்பணி தொடர வாழ்த்துகின்றோம்.

இது போன்று மற்றுமொரு நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில்
16.6.2013ல் ஏறத்தாழ சுமார் 400 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம்!
வளர்க இவர்களின் ஜைனத்தொண்டு!

Sunday 23 June 2013

உலக சான்றோர்கள் மற்றும் தலைவர்கள் பார்வையில் சமண மதத்தை பற்றிய கருத்துக்கள்:

பேரறிஞர் கார்டுவெல்:


தமிழகத்திலும் இந்தியாவிலும் சிறப்புடன் விளங்கிய ஜைன மதம் அரசியலில் மட்டுமல்ல எல்லாதுறையிலும் மக்களை மேன்மைபடுத்தினர்.உண்மையில் அவர்களின் காலமே நாகரிகத்தின் பொற்காலம் என குறிப்பிடுகிறார். 

 

 டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் குடியரசு தலைவர்):


இவர் எழுதிய (INDIAN PHILOSOPHY) இந்திய தத்துவங்கள் என்னும் நூலில் நான்கு வேதங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே ஜைனம் (சமணம்) சிறந்து விளங்கியது என்றும், ஜைன மதத்தின் முதல் கடவுள் ரிஷபநாதர் (ஆதிநாதர்) என்று கூறுகிறார்.

 

 டாக்டர் ஹெர்மன் ஜெகோபி (வரலாற்று பேராசிரியர் LP டெஸிடோரி ITALY):


இவர் ஜைன மதம் மற்ற எல்லா சமயங்களை விட தொன்மை வாய்ந்தது என்றும்,மக்களை சீர்திருத்திய புனிதமான மதம் என்றும் கூறுகிறார்.

 

ஸர் பட்டம் பெற்ற மறைந்த தமிழ் பேரறிஞர்R.K.சண்முகம் செட்டியார் அவர்கள்கூறியது:

 

தமிழின் மொழியின் இலக்கியம் வளர்ந்ததில் ஜைனர்களின் பங்கு மிகவும் பெரியது.திருக்குறள்,சிலப்பதிகாரம்,

சீவகசிந்தாமணி,நாலடியார் மற்றும் இலக்கண நூல்கள்,பெரும்கதை நூல்கள் உட்பட பல உயரிய தமிழ் காவியங்களை படைத்தவர்கள் சமணப்புலவர்களே என்றும்,இவர்களின் தமிழ்தொண்டில் பல அரிய கலை பொக்கிஷங்களை இந்த உலகம் பெற்றிருக்கிறது என்கிறார்.

 

டாக்டர் பேராசிரியர் ஹாஜிமே நாஹ்முரா:

சீன மொழியில் எழுதப்பட்ட திரிபீடகம் என்கிற புத்தநூலில்ஜைனமதத்தின் முதல் கடவுள் ரிஷபநாதரை(ஆதிநாதரை) பற்றி பல குறிப்புகள்உள்ளதுஎன்கிறார்.

  ஷட்சாஸ்திரம் என்னும் பழமையான சீனநூலில் முதல் அத்யாயத்தில் ரிஷப தேவரை "பகவத்" என்று அழைக்கப்பட்டு இவருடைய சீடர்களே முதன் முதலில் அஹிம்சையை பரப்பினர் என்றும்,பிடகிரந்தம் என்னும் நூல் சீன மொழியில் (இதுவும் ஒரு ஜைன நூல்) கிபி 519ல் போதிருசி என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு,திரிபீடகம் என்னும் சீன புத்த மத நூலில் சேர்த்துள்ளார்.

 

 ஜப்பானியர்கள்

  ஜப்பானில் ஜப்பானியர்கள் விருஷப நாதரை (ஆதிநாதரை) "ரோக் ஷேவ்" என்று அழைத்து வழிபாடு செய்துள்ளனர்.

 

 

 

இலங்கையில் ஜைன மதம்:

  இலங்கையில் மகாவம்சம் என்ற நூலில் தற்பொழுது இலங்கையில்உள்ளஅனுராதாபுரம் என்னும் இடத்தில், கி.பி ஐந்தாம் நூற்றாண்டுவரைஆதிநாதர்(ரிஷபநாதர்) கோவில் ஜைன புராதான வழிபாட்டு ஸ்தலமாகஇருந்ததாககுறிப்பிடப்பட்டுள்ளது

 

 R.G ஹர்ஷே(டெக்கான் கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர்)

தற்பொழுது அலாஷ்யா என்று அழைக்கப்படும் இடத்தில் கிறுஸ்து பிறப்பதற்கு முன் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்த சிலை ரிஷபதேவர்(ஆதிநாதரின் சிலை) என்றும்.இந்த நாட்டு மக்கள் பனிக் மொழியில் ரிஷீப் என்கின்ற சொல்லில் ஆதிநாதரையும் அவரது சின்னமான எருதையும் வழிபட்டு வந்துள்ளனர் என்கிறார்.மேலும் அலாஷ்யா நாட்டில் ஸஸ்மாரா என்கிற இடத்தில் கவிதை நடையில் உள்ள கல்வெட்டில்,ஆதிநாதர்(ரிஷபநாதர்) எல்லா கர்மங்களையும் வென்று முழுதுணர் ஞானியானார் என்றும் அவரது சீடர்கள் உலகம் முழுவதும் ஜைன அஹிம்சை நெறிகளை முதல்முதலில் பரப்பினர் என்றும் பொரித்துள்ளதாக கூறுகிறார்.

 

 


 

மத்திய ஆசியா முதல் சோவியத் வரை ஜைன மதத்தை பற்றி உலக புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்து:

  சோவியத் ரஷ்யாவில் அல்மேனியாவிற்கு அருகே உள்ள கரீமர்ப்யூலா(சிகப்பு மலை என்று அர்த்தம்) ஆதிநாதரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.பாபிலோனியாவில் இஸ்பேசூர் என்னும் நகரத்தில்
எருது சின்னங்களுடன் ரிஷபநாதரின்(ஆதிநாதரின்) சிலை கண்டுபிடித்தார்கள்.இஸ்பெக்ஜூர்,மவாதியா,ஜீன்ரேவி போன்ற இடங்களில் ஆதிநாதரின் நிர்வாண சிலைகள் கிடைத்துள்ளன.

 

 பாலகங்காதர திலகர்:

 ஜைன மதத்தை தோற்றுவித்த மூலக்கடவுள் மஹாவீரர் அல்ல,அந்த மதத்தின் முதற் கடவுள் ஆதிபகவான் என்கின்ற ரிஷபநாதர் ஆவார்.ஜைன மதத்தையும் இவருக்கு முன் உள்ள 23 தீர்தங்கரர்களின் கருத்துக்களை பரப்பியவரும் ஆன 24வது தீர்தங்கரர் மஹாவீரர் என்று எழுதியுள்ளார்.

 

 

 ஜெர்மன் பேரறிஞர் ஹெர்ட்டல்:

ஜைனர்களின் இலக்கிய படைப்புகள் வியப்பையும்,மகிழ்ச்சியையும்ஏற்படுத்துகிறது.ஜைனர்கள் இல்லையென்றால் பெரும்பாலான இலக்கியம் முழுமை அடைந்திருக்காது.

 

இத்தாலி L.P. தெஸ்ஸிதோரி இலக்கியவாதி:

ஜைன மதத்தின் போதனைகள் யாவும் விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.நவீன உலகம் விஞ்ஞானத்தில் முழு வளர்ச்சிஅடையும்பொழுது இதன் பெருமை தெரியும் என்கிறார்.


 

 ஜார்ஜ் பெர்னார்டுஷா (புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்)

  மறுபிறப்பு என்று ஒன்று இருந்தால் அடுத்த பிறவியில் இந்தியாவில் ஒரு ஜைன குடும்பத்தில் பிறந்து,ஜைன மதத்தின் அனைத்து தத்துவ கோட்பாடுகளையும் கற்றுகொண்ட மனிதன் ஆவேன்.இதன் போதனைகளையும் அஹிம்சை தர்மத்தையும் கண்டு பிரமித்த நான் அன்றுமுதல்எனது வாழ்வு முடியும் வரை உணவில்இறைச்சியும்,மதுவையும்

தவிர்த்துவிட்டேன்என்கிறார்.

இந்த கருத்து காந்தியடிகள் புதல்வர் தேவதாஸ் காந்தியிடம் உரையாடிகொண்டிருந்த சமயத்தில் கூறியதாக அப்போதைய பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டி

 

 அபுல்பாஸல்:

இவர் 11ஆம் நூற்றாண்டில் அரசாண்ட மொகலாய மாமன்னர் அக்பர் அரசவையில் தலைசிறந்த அமைச்சர் ஆவார்.இவர் பின்வருமாறு கூறுகிறார்.இந்தியாவை கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட மாமன்னன் அசோகர்,ஜைன மதத்தை காஷ்மீர் வரை பரப்பியதாக எழுதியுள்ளார்


 

தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகள்:

  அஹிம்சையை இந்த உலகிற்கு போதித்த ஜைன மதத்தில், கொல்லாமையை இந்த உலகம் முழுவதும் பரப்பிய மஹாவீரர், எல்லோரலும்வணங்கப்படக்கூடிய தகுதி படைத்தவர்.


 

முன்னாள் பாரதபிரதமர் இந்திராகாந்தி:

1981ல் பார்லிமெண்டில் ஒரு சில உறுப்பினர்களின் எதிர்கேள்விகளுக்கு பின்வருமாறு பதிலளித்துள்ளார். 
ஜைனத்தின்24 தீர்தங்கரர்கள் போதித்த அஹிம்சை தர்மத்தை பின்பற்றி காந்தியடிகள்இந்த நாட்டிற்கு சுதந்திரத்தை வாங்கித்தந்துள்ளார்.நமது நாடும் ஜைன மதமும் அஹிம்சை வழியில் முழு நம்பிக்கையுடன் செயல்படுகிறது.ஆகையால் ஜைன மத கோட்பாட்டின் மேன்மையான வழியை எனது அரசாங்கம் பின்பற்றும்!


 

யஜூர் வேதத்தில் ஜைனம்:

இந்துசமயத்தில் பழமையான வேதங்களில் ஒன்றான் யஜூர் வேதத்தில், 19வது அத்யாயத்தில் 14வது சுலோகத்தில் "அருகக்கடவுளே(ஆதிநாதர்) பல கொள்கைகளை உலகிற்கு போதித்து,உனது நிர்வாண உடலை அணிகலன்களாய் பூண்டுள்ளாய்,எல்லா உயிர்களுக்கும் போதிக்கும் திறன் வேறு யாரிடத்தில் தோன்றும்?,நீர் பெற்றிருக்கும் முழுதுணர் ஞானம் இந்த அண்டம் முழுவதும் காணப்படுகிறது,எல்லா உயிர்களையும் காத்து, காமத்தை வென்றவனே!என போற்றுகிறது

 

 


 

யோகவாசிட்டம்:


 

இந்து சமயத்தின் பழமையான வடமொழி நூலான யோகவாசிட்டத்தில் 15வது அத்தியாயத்தில் 8வது சுலோகத்தில் ஸ்ரீராமபிரான்கூறியதாக

பின்வருமாறு கூறுகிறது-

இராமன் என்கின்ற நான் இளவரசன் இல்லை.உலக பொருள்களின் மீது எனக்கு ஆசைகள் கிடையாது.ஜைன கடவுள்களைப்போல (தீர்தங்கரரை போல) எனது உள்ளத்தில் எப்பொழுதும் அமைதியாகவும்,அஹிம்சையாகவும் இருக்க விரும்புகின்றேன். 

 

 

 டாக்டர் ஹெர்மன் ஜக்கோபி(ஜெர்மன் ஆராய்ச்சியாளர்):

இந்திய சமயங்களை நான் ஆராய்ச்சி செய்ததில் ஜைன சமயம் ஒரு பழம் பெரும் மதம் என்றும்,இந்த மதம் எந்த மதத்தில் இருந்தும்கிளையாக

தோன்றவில்லை என்றும்,பழங்கால இந்தியாவின் தொன்மைகளையும், சமய வாழ்கை முறைகளையும் நாம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,முதலில் ஜைனத்தை படித்து பார்க்காமல் இதனைஉணரமுடியாது

என்றும் கூறியுள்ளார். 

 

 

 

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜைன மதம்:

  உலக புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சிதாரோவில் கிடைத்த புதைபொருள்களின் ஆயுட்காலம் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும், அங்கு கிடைத்த சிற்பங்களில் ஜைன மதத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக் சின்னங்களும்,ஜினாய நம என்ற வாழ்த்துக்களுடன் கூடிய முத்திரைகளும்,நிர்வாணயோக நிலையில் உள்ளரிஷபநாதரின்

(ஆதிநாதரின்) சிற்பங்களும்,ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள குளங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Wednesday 20 March 2013

கலியுகத்தை பற்றி ஜைனம் விவரிக்கும் காலங்கள்:

கலியுகத்தை
பற்றி ஜைனம் விவரிக்கும் காலங்கள்:
காலத்தை
ஜைனம் இரண்டு வகையாக பிரிக்கின்றது
1.
அவசர்ப்பிணி
2.
உத்சர்ப்பிணி
அவசர்ப்பிணி
காலத்தில் மனிதனின் ஆயுள் தேய்பிறைபோல இறங்குமுகமாக
இருக்கும்
.இது பத்து கோடானுக்கோடி வருடங்களை கொண்டது.
அவசர்ப்பணி
காலத்தை சமணம் ஆறு வகையாக பிரிக்கின்றது.
1.
நன்நற்காலம்:
இந்த
காலத்தின் அளவு நான்கு கோடானுகோடி கடற்காலம் என்றும்(ஒரு கடற்காலம் என்பது பத்துகோடி ஆண்டுகள்).
இந்த
காலத்தில் மனிதனின் உயரம் 6000 வில் என்றும்(ஒரு வில் என்பது 6 அடி)
ஆயுள்
மூன்று பல்லமாக இருக்கும்.
2.
நற்காலம்:
இந்த
காலத்தின் அளவு 3 கோடானுகோடி கடற்காலம்,மனிதனின் ஆயுள் 2 பல்லமாகவும்,உயரம் 4000 வில் அளவு உடையதாகவும் இருக்கும்.
3.
நற்காலம்:
இந்த
காலத்தின் அளவு 2 கோடானுகோடி கடற்காலம் என்றும் மனிதனின்
ஆயுள்
1 பல்லமாகவும் உயரம் 2000 வில் அளவுடையதாகவும் இருக்கும்.
4
தீநற்காலம்:
இந்த
காலத்தின் அளவு 1 கோடானுகோடி கடற்காலம் என்றும் மனிதனின்
ஆயுள்
42,000 ஆண்டுகள் உயரம் 500 வில் அளவு உடையதாக இருக்கும்.
5.
தீக்காலம்:
இந்த
காலத்தின் அள்வு 21,000 ஆண்டுகள்.இதில் மனிதனின் அயுள் 100 ஆண்டுகள் இருக்கும் என்றும் உயரம் 7 முழமிருக்கும் என்றும் சமணம் கூறுகிறது. இப்பொழுது கலியுகத்தில் 5ஆம் காலமாகிய தீக்காலம் நடந்துகொண்டு இருக்கின்றது.
6.
தீதீக்காலம்:
இதுவே
கலியுகத்தின் கடைசிக்காலம் ஆகும்.இந்த காலத்தின் அளவு 21,000 வருடம் நடக்கும் மனிதனின் உயரம் 1 முழம் மட்டும் இருக்கும்.மனிதனின்
ஆயுள்
வெறும் 16 வருடங்கள் மட்டுமே இருக்கும்.இந்த காலம் மிகவும் கொடுமையாக இருக்கும் என்றும் இதன் முடிவிற்கு பிறகு உலகம் எந்த விதமான உயிரனமும் தோன்றாமல் 1 லட்சம் வருடம் சூன்யமாக இருக்கும்.
இதனை
சமணம் சூன்யகாலம் என்று குறிப்பிடுகிறது. இந்த காலம் கடந்த
பின்னர்
உயிரினம் தோன்றி உதர்சர்ப்பிணி காலம் தொடங்கும்.
குறிப்பு
:ஆதிநாதர் தோன்றியது நன்நற்காலம் ஆகும்.இதுவே உத்தம போகபூமி காலம் (கற்பக விருட்சககாலம்)

Sunday 17 February 2013

பூமியின் வயது" இந்திய புராணமும்,உலக விஞ்ஞானமும்:

ஆதிநாதரை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்குமுன் புராணங்களில் காணப்படும் மெய்ஞான உண்மைகளைதெரிந்து
கொள்வோம்!நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு ஆண்டுகள் பழமையானது என்பதை பின்வரும் குறிப்புகளால்தெரிந்துகொண்டு
பெருமை அடைவோம்!யுகங்களின் கணக்கு:1.
குருத்தா யுகம்=17,28,000 ஆண்டுகள்2. திரேதா யுகம்=12,96,000 ஆண்டுகள்3. துவாபரதா யுகம்=08,64,000 ஆண்டுகள்4. கலியுகம்=04,32,000 ஆண்டுகள்
ஆகமொத்தம்
43,20,000 ஆண்டுகளைகொண்டது
.
இந்த
நான்கு யுகங்களை கொண்டது 1 மகாயுகம் என்பதுஆகும்
.
71
மகாயுகங்களை கொண்டது 1 மன்வன்தரம் என்பதுஆகும்
.
தற்பொழுது
27 மகாயுகம் முடிந்து 28 வது மகாயுகம் நடக்கிறது.
மன்வந்தரம்
7 வது முறை நடக்கிறது.

71
மகாயுகம்* 43,20,000(1 யுகம்) பெருக்கினால் (71*43,20,000)=30,67,20,000 (
முப்பது கோடியே அறுபத்து ஏழு லட்சத்து இருபது ஆயிரம் வருடங்கள் ஆகுகிறது)
6
மன்வன்தரம் முடிந்துள்ளதால்,(6*30,67,20,000(1
மன்வன்தரம்)) பெருக்கினால்= 184,03,20,000 வருடங்கள் ஆகும்.
ஆக மொத்தம் 6 மன்வன்தரம் முடிந்தபோது பூமியின் வயது நூற்று எண்பத்து நான்கு கோடியே மூன்று லட்சத்து இருபதாயிரம் ஆண்டுகள் ஆனது.
ஒரு
மன்வன்தரம் முடிந்தவுடன் ஒரு சந்திகாலம் என்பதுஆரம்பிக்கும்
.
அது
நடந்து முடிக்க 17,28,000 ஆண்டுகள்(பதினேழு லட்சத்துஇருபத்து
எட்டாயிரம் ஆண்டுகள் ஆகும்)
தற்பொழுது
6 சந்திகாலம் முடிந்துள்ளதால் 6* 17,28,000=1,03,68,000
வருடம்(ஒரு கோடியே மூன்று லட்சத்து அறுபத்து எட்டாயிரம்வருடம்
ஆகிறது.)மேலும் தற்பொழு 28வது மகாயுகத்தை பூமி தாண்டிய
வருடம்
38,93,105 (முப்பத்து எட்டு லட்சத்து தொண்ணூற்றுமூவாயிரத்து
நூற்று ஐந்து வருடம்) ஆகுகிறது.
மேற்கூறிய
அனைத்து வருடங்களையும் கூட்டினால்,6
மன்வன்தரம் =184,03,20,0006
சந்திகாலம் =001,03,68,00028
மகாயுகத்தில் பூமி தாண்டிய வயது =000,38,93,105
ஆகமொத்தம் 185,45,81,105
நூற்று என்பத்து ஐந்து கோடியே நாற்பத்து ஐந்து லட்சத்துஎண்பத்து
ஓராயிரத்து நூற்று ஐந்து வருடங்கள் ஆகிறது.இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணக்கிட்டு இந்தியாவில் ஆன்மீகத்தின் வாயிலாககூறப்பட்டது
!

Saturday 9 February 2013

ஜைன திருத்தலங்கள் ஒரு பார்வை
 நாம் இந்த தொகுப்பில் இரு ஜைன ஆலயங்களின் வரலாற்றையும்,பெருமைகளையும் தெரிந்துகொள்வோம்.
 
 
(1)
தீபங்குடி திருத்தலம்:(திருவாரூர் மாவட்டம்)





இந்த திருத்தலம் ஆதிபகவானை மூலவராக கொண்டு தொண்மை வாய்ந்தவரலாற்று

சிறப்பு மிக்க பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஜைன திருத்தலமாகும்.இந்த கோவிலின் கட்டடவேலைப்பாடு அதிநுட்பம் வாய்ந்த சுண்ணாம்புகலவையினால்
செய்யப்பட்ட கலைநுட்ப வேலைப்பாடுகள் காண்போரை

வியப்பில்
ஆழ்த்துகிறது!சுற்றி மதிற்சுவர்கள் கொண்ட பிரமாண்டமான தோப்புகளுக்கு நடுவில்இயற்கை
எழில் கொஞ்சும் சூழ்நிலையில்,கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
மூலவராகிய ஆதிநாதருக்கு, தீபநாயகர் என்ற சிறப்பு பெயருடன் அழைப்பதால்இந்த
ஊருக்கு தீபங்குடி என்ற பெயர் வரப்பெற்றதாக கூறப்படுகிறது.




ஸ்ரீ
ராமருடைய மகன்களான லவன்,குசன் இருவரும் வழிப்பட்டதாககர்ணபரம்பரை
வரலாறாகும்!போரின் கொடுமைகளையும்,

பெருமைகளையும் உலகுக்கு தமிழின் மூலம்"கலிங்கத்து பரணி" பாடி உணர்த்திய "ஜெயங்கொண்டார்" என்னும் சமண தமிழ் புலவர் வாழ்ந்து தமிழுக்கு பெருமைதேடி தந்த ஊர் தீபங்குடியாகும்!
மேலும் ராஜராஜ சோழனின் தங்கை குந்தவை ஜைனத்தின் மீதுள்ளபக்தியினால்
இக்கோவிலுக்கு ஏராளமான நிதியுதவி செய்து ஆதரித்துள்ளார்.பிரமாண்டமான கோட்டை மதில்களுடன் கூடிய சுற்று பிரகாரத்தை கொண்டஇந்ந
திருத்தலத்தில் தெற்கு பிரகாரத்தில் பிரம்ம தேவருக்கு என்று தனி ஆலயமும், தர்மதேவி,சுருதகந்தம்,ஜ்வாலாமாலினி,பைரவர் என்றுசுற்று
பிரகார கோவில்கள் மேலும் அழகுசேர்க்கிறது!மூன்று கால பூஜை நடக்கும் இந்த பழமையான ஜைன ஆலயம் தற்பொழுதுதமிழக
இந்து சமய அறநிலைய துறையின் கட்டுபாட்டில் உள்ளது.தற்பொழுது

மிகவும் சிதலம் அடைந்துள்ள இந்த திருத்தலம் தீபங்குடி
ஜைனர்களின்
முயற்ச்சியாலும்,பிற பக்தர்களாலும் புணரமைப்புவேலை
நடந்து வருகிறது! 
ஆன்மீகத்தில் பற்று கொண்ட அன்பர்கள்,தங்களால் இயன்ற பொருள் உதவியோ,பண உதவியோ செய்யுமாறு வேண்டுகிறேன்!பொருள் உதவி செய்பவர்கள் சிமெண்ட் மூட்டை,மற்றும் பெய்ண்டிங்,சுண்ணாம்பு பூச்சாகவோ வழங்கலாம்.பண உதவி செய்ய விரும்புபவர்கள் வரைவு வோலையாகவும்,டி.டி யாகவும்,மணியாடர் மூலமாகவும் ," ஸ்ரீ தீபநாயக சுவாமி ஷேத்திர சேவா சங்கம் " பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி புண்ணியம் பெறலாம்.முகவரி:தீபங்குடி கிராமம்,செம்மங்குடி போஸ்ட்,குடவாசல்  தாலுக்கா,திருவாரூர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.
பஸ்ரூட்:கும்பகோணம்-திருவாரூர் பஸ் மார்க்கத்தில்,அரசவனங்காடு என்கின்ற பஸ்டாப்பில்
இறங்கி,அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தீபங்குடி.

தீபங்குடி கோவிலின் புகைபடத்தை அளித்து எங்களை ஊக்கப்படுத்திய தீபங்குடி
சீதளப்பிரசாத் (RETD VAO) மற்றும் பூபாலன்,மன்னார்குடி(RETDபொறியாளர்),வளத்தி அஜித்பிரசாத்(மஹாவீர் ஸ்டோர்ஸ்,ஆவடி)மற்றும் தீபங்குடி ஜைன இளைஞர்கள் ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.







(2) இளங்காடு ஜைன கோவில்:


ஆதிநாதரை மூலவராக கொண்ட இக்கோவில் காலத்தால் மிகவும்பழமை
வாய்ந்ததாகும்




கடைச்சங்க
காலத்தில் தமிழகத்தில் ஏற்பட இருக்கும் ஆழிப்பேரலைமயிலாப்பூரை
அழித்துவிடும் என்று 22வது தீர்தங்கரரான நேமிநாதரின் பரிவார தேவதையான தர்ம தேவி அம்மன் மக்களை எச்சரித்ததால்,சமணர்கள்,தர்மதேவியின் சிலையையும்,நேமிநாதர் சிலையையும் இளங்காட்டில் உள்ள ஜைன ஆலயத்தில் ப்ரதிஷ்டை செய்தனர்என்பார்கள்
.இந்த சிலையை உருவாக்கிய காலம்(விக்ரம ஷம்வத் 720இல் ஆகும்).இந்த காலத்தில் ஜினசேனாச்சார்யர் என்கின்ற மிகப்பெரிய ஜைன முனிவரின்சிஷ்யர்
என்று கூறப்படும் டெல்லியின் மன்னராக ஆட்சி செய்த அமோகவர்ஷன்என்பவரால்
உருவாக்கப்பட்டதாகும்.இந்த இருசிலைகளும் மிகவும் மூர்த்திகரமாக இன்றளவும் உள்ளது உண்மை!


ஒவ்வொரு வெள்ளி கிழமையும் தர்மதேவிக்கும் ,நேமிநாதருக்கும் சிறப்பானபூஜைகள்
இங்கு நடத்தப்படுகிறது.தமிழக ஜைனர்கள் மற்றும் சுற்று வட்டாரமக்கள்
தங்கள் நேர்த்திகடனை செலுத்த வருவது இந்த திருத்தலத்தின் மகிமையை உணர்த்தும் நேரடி சாட்சியாகும்!பழங்காலம் தொட்டே இக்கோவிலில் அருள் கொண்ட அம்மன் தருமதேவிஆலய
அர்ச்சகரின் மீது இறங்கி சாமியாடி மக்களின் குறைகளை தீர்க்கஅருள்வாக்கு
கூறிவருகிறாள்.இந்த நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது!இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும்அர்ச்சகரோ
எந்த கட்டணமும் வசூலிப்பது கிடையாது.தற்பொழுது இந்த ஆலயத்தில் ப்ரதிஷ்டை பணிகள் நடந்துவருகிறது.ஆன்மீகத்தில் பற்று கொண்ட அன்பர்கள்,தங்களால் இயன்ற பொருள் உதவியோ,பண உதவியோ செய்யுமாறு வேண்டுகிறேன்!பொருள் உதவி செய்பவர்கள் சிமெண்ட் மூட்டை,மற்றும் பெய்ண்டிங்,சுண்ணாம்பு பூச்சாகவோ வழங்கலாம்.பண உதவி செய்ய விரும்புபவர்கள் வரைவு வோலையாகவும்,டி.டி யாகவும்,மணியாடர் மூலமாகவும் ,"ஸ்ரீ நேமிநாதர் பகவான் டெம்பிள் டிரஸ்ட்" பெயரில் எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி புண்ணியம் பெறலாம்.விலாசம்:ஜைன் கோவில்,இளங்காடு கிராமம்(&அஞ்சல்) ,வந்தவாசிதாலுக்கா
,திருவண்ணாமலை மாவட்டம் ,தமிழ்நாடு,இந்தியா.
ரூட் விபரம்:வந்தவாசியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில்ஐந்தாவது
கிலோமீட்டரில் உள்ளது.முக்கிய குறிப்பு:மயிலாப்பூரில் சமணர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக இன்றும் சென்னை கடற்கரையை ஒட்டிய மயிலாப்பூரில் நயினார்தெரு ("நயினார்" என்பதுசமணர்களை
குறிக்கும்)என்று ஒரு தெரு இன்றும் உள்ளது.இளங்காடு ஜைன ஆலயத்தின் புகைப்படங்களை அளித்து எங்களை ஊக்கப்படுத்திய இளங்காடு தேவகுமார்(கோவில்நிர்வாகி),இளங்காடு கிருஷ்ணராஜ்(தமிழ்நாடு
அரசு
போக்குவரத்து கழகம்),இளங்காடு பன்னீர்(தமிழ்நாடு
அரசு

போக்குவரத்து கழகம்) ஆகியோருக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.  நன்கொடை அளித்த பக்தர்கள் தங்களின் விவரத்தை இந்த வலைபூவிலோஅல்லது
எங்கள் மின்னஞ்சல் முகவரி, அலைபேசியில் பகிருமாறுஅன்புடன்
கேட்டுகொள்கிறேன்.அதை நாங்கள் தொகுத்து பின்னர்வெளியிடுவோம்


-இந்த
கட்டுரையை எழுதியவர்

வி
.ஜீவகன் வளத்தி.

வெளியிட்டவர்
-
ஜீ.ஹரிஹரசுதன்,
B.E third year,
வளத்தி